Showing posts with label CHICKEN RECIPES. Show all posts
Showing posts with label CHICKEN RECIPES. Show all posts

Wednesday, 1 November 2017

மங்களூர் சுக்கா சிக்கன்

TO VIEW IN ENGLISH : PLS CLICK

மங்களூர் சுக்கா சிக்கன்


வணக்கம் ,
மங்களூர் சுக்கா சிக்கன் !! நாங்கள் சிக்கன் விரும்பிகள் , சிக்கனில் எது செய்தாலும் எங்களுக்கு பிடிக்கும் .அதனால் சிக்கனில் எதாவது புதிதாக செய்வது வழக்கம்.இன்று மங்களூர் பாரம்பரிய சிக்கன் சுக்கா செய்தேன்.
மிகவும் அருமை , நிச்சயம் எனது மெனுவில் இந்த சுக்கா சிக்கன் முதலில் இருக்கும்  .
மசாலா மணத்துடன் , அருமையான சிக்கன் சுக்கா செய்முறை உங்களுக்காக ,
தேவையானவை :
சிக்கன் – 1/2 கிலோ
மஞ்சள் பொடி – 1/2 தேக்கரண்டி .
புளி -1″ – 1 துண்டு
பூண்டு – 10 பல்
வெங்காயம் – 2 ( பெரியது) .
நெய் -2 தேக்கரண்டி
கருவேப்பிலை ஒரு கொத்து
உப்பு தேவையானஅளவு.
வறுப்பதற்கு :
துருவிய தேங்காய் -1 கப்
பூண்டு -12 பல்
சீரகம் -1 தேக்கரண்டி .
எண்ணையில் வறுப்பதற்கு :
நெய் -1 தேக்கரண்டி
வரமிளகாய் -10
முழு மல்லி -3 தேக்கரண்டி
மிளகு -1 தேக்கரண்டி
சீரகம் -1 தேக்கரண்டி
வெந்தயம் -1/4 தேக்கரண்டி
சோம்பு -1 தேக்கரண்டி
செய்முறை :
) சிக்கனை நன்றாக கழுவி ,சுத்தம் செய்து வைக்கவும் .வெங்காயத்தை நறுக்கி வைக்கவும் .
) வாணலியில் என்னை சேர்க்காமல் தேங்காயை , குறைந்த சூட்டில் நறுமணம் வரும் வரை வறுத்து ஒரு தட்டிற்கு மாற்றவும்
) அதே வாணலியில் சீரகம் , பூண்டு ஆகியவற்றை தனித்தனியாக பொன்னிறமாக வறுத்து தேங்காயுடன் சேர்த்து பொடியாக அரைத்துக்கொள்ளவும்.

) வாணலியில் நெய் சேர்த்து முழு மல்லி , சீரகம் சேர்த்து 30 வினாடிகள் மிதமான சூட்டில் வறுக்கவும் , அத்துடன் மிளகு , சோம்பு , வெந்தயம் சேர்த்து பொன்னிறமாக , நறுமணம் வரும் வரை வறுக்கவும்.வறுத்த பொருட்களை ஒரு தட்டிற்கு மாற்றவும் .
) பின்னர் அதே வாணலியில் மிளகாயினை சேர்த்து வறுத்தெடுத்து , மேலே உள்ள வறுத்த பொருட்களோடு ஆறவிடவும் .

) அறியபொருட்களோடு மஞ்சள் தூள் , பூண்டு , புளி சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும்.
) வாணலியில் 1 தேக்கரண்டி நெய் சேர்த்து 1 நறுக்கிய வெங்காயம் , சிக்கன் ,உப்பு ,அரைத்த விழுது சேர்த்து கலக்கி , சிக்கன் வேகும்வரை வேகவிடவும் .
) சிக்கன் வெந்தவுடன் ,அரைத்த தேங்காய் பொடியினை சேர்த்து கலக்கி , ஒரு மூன்று நிமிடம் வேகவிட்டு அடுப்பில் இருந்து இறக்கவும்.
) ஒரு சிறிய வாணலியில் மீதமிருக்கும் நெய் சேர்த்து , 1 நறுக்கிய வெங்காயம் ,கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக தாளித்து சிக்கனுடன் சேர்த்து கலக்கி பரிமாறவும்.
) நான் ஆம்பூர் சிக்கன் பிரியாணியுடன் பரிமாறினேன் , நீங்கள் சாதத்துடன், தோசை , சப்பாத்தி , ஆப்பம் ஆகியவற்றுடன் பரிமாறலாம்.பேலியோ டயட் என்றால் அப்படியே சாப்பிடலாம்.

குறிப்பு :
அ) நெய் இல்லைஎன்றால் நல்லெண்ணெய் உபயோகப்படுத்தலாம் அனால் நெய் நன்றாக இருக்கும்.
ஆ) தேங்காய் பொடி சேர்த்தபின் அதிகநேரம் வேகவிடவேண்டாம் , 3  நிமிடம் போதும்.
இ) வறுக்கும் பொழுது எப்பொழுதும் குறைந்த சூட்டில் வறுப்பது சுவையை கூட்டும்.

பெப்பர் சிக்கன் / மிளகு கோழி மசாலா

TO VIEW IN ENGLISH : PLS CLICK

பெப்பர் சிக்கன் / மிளகு கோழி மசாலா

வணக்கம்,
நாங்கள் வெளியே சாப்பிட சென்றால் முதலில் எனது கணவர் ஆர்டர் செய்வது பெப்பர் சிக்கன் தான் , மற்றவையெல்லாம் பிறகு தான் .நான் பெப்பர் சிக்கன் பலமுறை செய்தாலும் , இந்த ரெசிபி தான் ஹோட்டலில் கிடைப்பதுபோல் இருந்தது.
காரசாரமான மிளகு சிக்கன் கிரேவ்ய் உங்களுக்காக ,
தேவையானவை :
சிக்கன் – 1 கிலோ .
வெங்காயம் – 1
தக்காளி – 1 சிறியது
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மல்லி பொடி – 1 1/2 தேக்கரண்டி
மிளகாய் பொடி – 1 தேக்கரண்டி
சிக்கன் மசாலா – 1 தேக்கரண்டி ( தேவையென்றால் சேர்க்கலாம் ).
தயிர் – 2 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
கடுகு – 1/4 தேக்கரண்டி
உப்பு தேவையானளவு
கருவேப்பில்லை ஒரு கொத்து
நல்லெண்ணெய் ( அல்லது ) தேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி .
அரைப்பதற்கு :
வெங்காயம் – 3
இஞ்சி – 1” துண்டு – 2
பூண்டு – 6 பல் .
வரமிளகாய் – 6
பட்டை -1” துண்டு – 2
கிராம்பு – 6
வறுத்து பொடித்துக்கொள்ள :
மிளகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1தேக்கரண்டி
செய்முறை :
) வெங்காயம் மற்றும் தக்காளியை சிறுதுண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
) மிளகு , சீரகத்தை வாணலியில் எண்ணெய் சேர்க்காமல் பொறியும் வரை வறுத்து பொடியாக்கிக்கொள்ளவும்.
) அரைக்கும் பொருட்களை ( வெங்காயம் , இஞ்சி ,பூண்டு , பட்டை , கிராம்பு ,மிளகாய்) சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துகொள்ளளவும் .
) குக்கர்இல் எண்ணெய் சூடாக்கி ,கடுகு ,சீரகம் சேர்த்து வறுத்து ,வெங்காயம் சேர்த்து வதக்கவும் . பின்னர் தக்காளி , அரைத்த விழுது சேர்த்து ,பச்சை வாடை போய், எண்ணெய் பிரித்து வரும்வரை வதக்கவும்.

) அத்துடன் மல்லி பொடி , மிளகாய் பொடி , மஞ்சள் தூள் , சிக்கன் மசாலா ,தயிர் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும் .
) பின்னர் சிக்கன் சேர்த்து கலக்கி , குக்கர்ஐ மூடி , 3 விசில் விடவும்.

) விசில் அடங்கியவுடன் , மூடியை திறந்து , தேவையான பதத்திற்கு வரும்வரை கொதிக்கவிடவும்.
) இறுதியாக மிளகு சீரக தூள் , கருவேப்பில்லை சேர்த்து கலக்கி 3 நிமிடம் வேகவிடவும்( ஒரு கொதிவந்தால் போதும்).

) இறுதியாக மல்லி இலை சேர்த்து ,அடுப்பில் இருந்து இறக்கவும்.
குறிப்பு :
) அவ்வப்போது அரைக்கும் மசாலாவில்தான் சுவை அதிகம்,அதனால் பிரெஷ் மசாலாவாக அரைத்துக்கொள்ளவும்.
) குக்கர்க்கு பதில் வாணலியில் செய்யலாம்.

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...