Showing posts with label RICE RECIPES. Show all posts
Showing posts with label RICE RECIPES. Show all posts

Thursday, 11 January 2018

காலிஃளார் பிரைட் ரைஸ்

  காலிஃளார் பிரைட் ரைஸ்


TO VIEW IN ENGLISH : PLS CLICK

வணக்கம் ,
காலிஃளார் பிரைட் ரைஸ் ! இப்பொழுது மறுபடியும் நான் மார்க்கெட்டில் காலிஃளார் அதிகம் வந்திருப்பதை கண்டேன் . அதனால் ஒரு பெரிய காலிஃளார் வாங்கிவிட்டேன் ஆனால் இன்று எனக்கு அதில் எனது பேலியோ உணவு செய்ய விருப்பம் இல்லை அதனால் பிரைட் ரைஸ் செய்துவிட்டேன்.எனது பேலியோ உணவையும் இதிலிருந்தே எடுத்துவிட்டேன்:)).
சுவையான , சத்தான பிரைட் ரைஸ் செய்முறை உங்களுக்காக ,
தேவையானவை :
காலிஃளார் -4 கப்
கேரட் – 1/2கப்
முட்டைகோஸ் – 1/2கப்
குடைமிளகாய் – 1
வெங்காயம் – 1
சோயா சாஸ் – 1/2தேக்கரண்டி
தக்காளி சாஸ் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையானஅளவு
மிளகுத்தூள் -1 தேக்கரண்டி .
கருவேப்பிலை – சிறிது
மல்லியிலை -5 தேக்கரண்டி
வெண்ணெய் ( அல்லது ) நெய் – 6தேக்கரண்டி
காலிஃளாருடன் கலக்குவதற்கு:
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2தேக்கரண்டி
கரம் மசாலா – 1தேக்கரண்டி
மல்லி தூள் – 1தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
தயிர் – 1 தேக்கரண்டி
உப்பு – 1தேக்கரண்டி
செய்முறை :
அ) காலிஃளார்ஐ சிறுதுண்டுகளாக நறுக்கி , கொதிக்கும் நீரில் 5 நிமிடம் வேகவிடவும் ,காலிஃளார் 90 % வெந்து ,கொஞ்சம் நறுக்கென்று இருக்கவேண்டும் . தண்ணீர் வடித்துவிட்டு , குளிர்ந்த நீரில் ஒரு முறை அலசவும் ( இதனால் காலிஃளார் குலைய வேகாமல் இருக்கும் ).
ஆ) தண்ணீரை முழுவதுமாக வடித்துவிட்டு காலிஃளாருடன் உப்பு , மல்லி தூள் ,மஞ்சள் தூள் , மிளகாய் தூள் ,கரம் மசாலா , இஞ்சி பூண்டு விழுது ,தயிர் சேர்த்து கலக்கி , 30 நிமிடம் ஊறவைக்கவும்.

இ) 30 நிமிடத்திற்கு பிறகு , வாணலியில் 2 தேக்கரண்டி வெண்ணை சூடாக்கி ,அதில் காலிஃளார் துண்டுகளை சேர்த்து அதிக சூட்டில் பொன்னிறமாக வறுக்கவும் .
ஈ) அரிசியை கழுவி , குக்கர்இல் 2 கப் தண்ணீர் ,அரிசி சேர்த்து 2 விசில் விடவும் , விசில் அடங்கியவுடன் 1 தேக்கரண்டி வெண்ணை சேர்த்து , உதிரியாக கிளறிவிடவும்.

உ) கேரட் , கோஸ் ,குடை மிளகாயை நீளவாக்கில் ,மெலிதாக வெட்டிக்கொள்ளவும் .வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

ஊ) வாணலியில் மீதமிருக்கும் வெண்ணை சேர்த்து ,வெங்காயம் , கருவேப்பிலை , நறுக்கிய காய்களை சேர்த்து அதிக சூட்டில் பொன்னிறமாக வறுக்கவும்.காய்கள் வெந்து சிறிது நறுக்கென்று இருக்கவேண்டும்.
எ) அத்துடன் சோயா சாஸ் , தக்காளி சாஸ் ,உப்பு சேர்த்து கிளறி , வறுத்த காலிஃளார் சேர்த்து கலக்கவும்.

ஏ) இறுதியாக சாதம் , மிளகு தூள் , மல்லி இலை சேர்த்து கிளறி ,சூடாக பரிமாறவும்.
குறிப்பு :
அ) காலிஃளார் மொறுமொறுப்பாக வேண்டுமானால் எண்ணையில் பொறித்தெடுக்கலாம் ,ஆனால் நான் சத்தான உணவாக இருக்கவேண்டும் என்பதால் சிறிது எண்ணையில் வறுத்தெடுத்தேன்.

கொத்தமல்லி சாதம்

கொத்தமல்லி சாதம்

Posted in : BRIYANI AND FRIED RICE, RICE RECIPES, VARIETY RICE on by : Saranya Arun Tags: , , , ,

TO VIEW IN ENGLISH : CLICK HERE

வணக்கம் ,
கொத்தமல்லி சாதம்!! ஆரோகியமான ,சுவையான மற்றும் மிகவும் எளிமையாக செய்யக்கூடிய கொத்தமல்லி சாதம் செய்முறை உங்களுக்காக ..
நான் அடிக்கடி வீட்டில் , மதிய உணவுக்காக இந்த சாதத்தை செய்வேன்.
10 நிமிடத்தில் செய்யக்கூடிய சாதத்தின் செய்முறை கீழே,
தேவையானவை :
அரிசி – 1 கப்.
உப்பு தேவையான அளவு .
தேங்காய் எண்ணெய் () நெய் – 3 தேக்கரண்டி .
கடுகு – 1 / 4 தேக்கரண்டி .
பிரிஞ்சி இலை – 1 .
பட்டை – 1 ” துண்டு – 1 .
கடலை பருப்பு – 1 தேக்கரண்டி .
உளுந்து பருப்பு – 1 தேக்கரண்டி .
வரமிளகாய் – 2 .
அரைப்பதற்கு :
கொத்தமல்லி இலை – 4 கப் .
வெங்காயம் – 1
இஞ்சி – 1 / 2 ” துண்டு -1
பச்சை மிளகாய் – 3
செய்முறை :
) அரிசியை நன்றாக அலசி , 2 1 /2 கப் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.
) வெந்த சாதத்தை ஒரு தட்டில் பரப்பி , 1 தேக்கரண்டி நெய் சேர்த்து ஆறவிடவும் .
) மல்லி இலையை சுத்தம்செய்து வேர் பகுதியை நீக்கி விடவும் .
) அரைக்கும் பொருட்களை தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக்கொள்ளவும்.
) வாணலில் நெய் சேர்த்து அத்துடன் கடுகு , பிரிஞ்சி இலை ,பட்டை ,வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் .

) அத்துடன் கடலை பருப்பு , உளுந்து பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வணக்கவும்.

) வணங்கிய பொருட்களுடன் , அரைத்த மல்லி விழுது சேர்த்து , மசாலா கெட்டியாகி , நிறம் மாறும் வரை வேகவிடவும் .
) அடுப்பில் இருந்து இறக்கி , உப்பு , வெந்த சாதத்தை சேர்த்து , மெதுவாக கிளறி பரிமாறவும் .

) அப்பளத்துடன் பரிமாற நன்றாக இருக்கும் .
குறிப்பு :
௧) முந்திரி ,நிலக்கடலை வேண்டுமானால் தாளிக்கும்பொழுது சேர்த்துக்கொள்ளவும்.
௨) சாதத்தை குழைய வேகவைக்கவேண்டாம் , மல்லி மசாலாவுடன் கலக்கும்பொழுது மிகவும் குழைந்துவிடும்.

Wednesday, 1 November 2017

உப்பு ரொட்டி

TO VIEW IN ENGLISH : PLS CLICK

உப்பு ரொட்டி


வணக்கம்,
உப்பு ரொட்டி !! பூரி போல் உப்பி இருப்பதால் இதற்கு உப்பு ரொட்டி என்று பெயர்.இந்த ஸ்னாக் பொள்ளாச்சியில் மிகவும் பிரபலம்.இதன் சுவை மற்றும் மனம் அரைத்தவுடன் சுடுவதில் தான் இருக்கிறது.மாவு மீதமானால் ஒரு நாள் பிரிட்ஜ்ல் வைத்து மறுநாள் சுடலாம் ,அதற்கு மேல் மாவு புளித்துவிடும்.வர மிளகாய்க்கு பதில் பச்சை மிளகாயையும் சேர்க்கலாம்.மற்றும் மாவு அரைக்கும் பொழுது தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக அரைக்கவேண்டும்.தண்ணீர் அதிகமாகி விட்டால் சிறிது நேரம் பிரிட்ஜ்ல் வைத்தால் மாவு கெட்டியாகிவிடும்.
தேவையானவை:
இட்லி அரிசி – 1 கப்.
துவரம் பருப்பு – 1 / 4 கப்.
வெங்காயம் – 1 ( பெரியது) .
கருவேப்பில்லை சிறிது.
சீரகம் – 1 டீஸ்பூன்.
வர மிளகாய் – 4 .
தேங்காய் – 1 / 4 கப்.
உப்பு தேவையான அளவு.
எண்ணெய் பொரிப்பதற்கு .
செய்முறை :
) அரிசி மற்றும் பருப்பை ஊறவைத்து , கிரைண்டர்யில் தண்ணீர் ஊற்றாமல் வெங்காயம்,சீரகம்,கருவேப்பில்லை,தேங்காய் ,மிளகாயுடன் கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். இறுதியாக உப்பு சேர்த்து கலக்கவும் .
) ஒரு துணியில் சிறிதளவு மாவை வைத்து , துணியால் மூடி மெதுவாக தட்டையாக அமுக்கவும்.
) வாணலில் எண்ணெய் சூடேற்றி தட்டிய மாவை பூரிபோல் பொரித்து எடுக்கவும்.சுவையான உப்பு ரொட்டி தெயார்.சூடாக பரிமாறவும்.
..  
      


Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...