Showing posts with label BRIYANI RECIPES. Show all posts
Showing posts with label BRIYANI RECIPES. Show all posts

Thursday, 11 January 2018

ஆம்பூர் சிக்கன் தம் பிரியாணி

ஆம்பூர் சிக்கன் தம் பிரியாணி

Posted in : BRIYANI AND FRIED RICE on by : Saranya Arun Tags: , , , , , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK

வணக்கம் ,
ஆம்பூர் தம் பிரியாணி !! மிகவும் குறைந்த பொருட்களை வைத்து எளிமையாக செய்யும் பிரியாணி ஆனால் சுவையும் , மணமும் வீடு முழுவதும் பரவியிருக்கும்.
நான் இதற்கு முன்னாள் இரண்டு முறை தம் பிரியாணி முயற்சி செய்துள்ளேன் ஆனால் திருப்தியாக இல்லை , காரணம் சரியான பாத்திரம் இல்லாததுதான் .இம்முறை பொள்ளாச்சி சென்றிந்த பொழுது இந்த பாத்திரத்தை எடுத்து வந்தேன் , கனமான பாத்திரம் தம் பிரியாணி செய்வதற்கு ஏற்றதாகும்.
நான் இந்த பாரம்பரிய பிரியாணி முறையை ஒரு காணொளியில் கண்டேன் , ஆம்பூரில் இருந்த ஒரு பாரம்பரிய சமையல் கலை நிபுணர் செய்து காட்டினார் . ஆம்பூர் பிரியாணி செய்வதற்கு சீராக சம்பா அரிசி உபயோகப்படுத்தப்படுகிறது , காரணம் அது சீரணத்திற்கு மிகவும் நல்லது என்பதால்.மிகவும் எளிதாக குறைந்த பொருட்களை வைத்து செய்தார் .
சுலபமான , அருமனையான ஆம்பூர் பிரியாணி செய்முறை உங்களுக்காக ,
தேவையானவை :
சீராக சம்பா அரிசி – 2 கப்.
சிக்கன் -1/2 கிலோ
வெங்காயம் – 1( பெரியது ).
வர மிளகாய் – 8
இஞ்சி விழுது – 2தேக்கரண்டி .
பூண்டு விழுது -2 தேக்கரண்டி
தயிர் – 1/2கப்
நெய் ( அல்லது ) எண்ணெய் – 5தேக்கரண்டி
எலுமிச்சை – 1/2 மூடி
மல்லி இலை – 1/2 கப்
புதினா இலை – 1/2 கப்.
பட்டை – 5
கிராம்பு -12
ஏலம் – 2
தண்ணீர் – 6கப் +1 கப்.
உப்பு தேவையானஅளவு
செய்முறை :
) வெங்காயம் மற்றும் தக்காளியை சிறுதுண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
) மிளகாயை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

) ஒரு பாத்திரத்தில் 6 கப் தண்ணீர் கொதிக்கவைக்கவும் , அத்துடன் கழுவிய அரிசி ,உப்பு சேர்த்து 90 % வேகும் வரை வேகவிடவும்.அரிசியை விரல்களால் நசுக்கினால் சிறிது குருணையாக இருக்கவேண்டும் ஆனால் நசுங்கிவிடும்.இந்த பக்குவத்தில் தண்ணீர் வடித்து அரிசியை தனியே வைக்கவும்.
) கனமான பாத்திரத்தில் எண்ணையை சூடாக்கி , அதில் பட்டை ,கிராம்பு , ஏலம் ,1 தேக்கரண்டி நறுக்கிய வெங்காயம் சேர்த்து குறைந்த சூட்டில் பொன்னிறமாக வதக்கவும்.

) அத்துடன் பூண்டு விழுது சேர்த்து நன்றாக பொன்னிறமாக வதக்கிய பின்பு , இஞ்சி விழுது , மல்லி இலை , புதினா இலை சேர்த்து நன்றாக வதக்கவும்.

) பின்பு மிளகாய் விழுது , மீதமிருக்கும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பச்சை வாடை போய் , எண்ணெய் திரண்டு வரும்வரை வதக்கவும் .
) நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி ,சிக்கன் ,உப்பு சேர்த்து ,தயிர் ,1 /2 கப் சூடான தண்ணீர் சேர்த்து , வேகவிடவும் .சிக்கன் வெந்தவுடன் எலுமிச்சை சாறு சேர்க்கவும் .


) இப்பொழுது வெந்த சாதத்தை சேர்த்து , கிளறி ,மூடிவைக்கவும் ( அரிசி சேர்த்தபின்பு மிகவும் கெட்டியாக இருந்தால் 1 / 2 கப் சுடுதண்ணீர் சேர்க்கலாம் ) .ஆவி வெளியே போகாமல் இருக்க மூடியின் மேல் கனமான தண்ணீர் பாத்திரத்தை வைக்கவும்.

) தோசை கல்லை சூடாக்கி , அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை வைத்து குறைத்த சூட்டில் 20 நிமிடம் வேகவிடவும் .

) 20 நிமிடத்திற்கு பிறகு , பாத்திரத்தை திறந்து சாதம் நன்றாக வெந்துஉள்ளதா என்று பார்த்து இல்லையென்றால் ஒரு கிளறு கிளறி மீதும் ஒரு பத்து நிமிடம் மூடி வைத்து வேகவிடவும் ( இவ்வாறு கிளறுவதால் அடிப்பாகம் குழைந்து  போகாமல் இருக்கும் ).

ஓஓ) பிரியாணி வெந்தவுடன் ஒரு முறை கிளறி சூடாக பரிமாறவும்.

ஒவ்) நான் சிக்கன் சுக்கா , கத்திரிக்காய் பச்சடி , தயிர் பச்சடியுடன் பரிமாறினேன்.


மட்டன் பிரியாணி

மட்டன் பிரியாணி


TO VIEW IN ENGLISH : CLICK

 வணக்கம் ,
மட்டன் பிரியாணி..எங்கள் வீட்டில் பிரியாணி அடிக்கடி செய்வதுண்டு.
பிரியாணி செய்வதில் நிறைய ரெசிபிக்கள் உண்டு .அதில் ஒன்று இந்த அடிப்படை பிரியாணியாகும் .
நறுமணமான , சுவையான மட்டன் பிரியாணி செய்முறை உங்களுக்காக ,
தேவையானவை :
ஆட்டுக்கறி – 1/2 கிலோ
ஜீ ரா சம்பா அரிசி – 2 கப்.
புதினா இலை – 1/2கப்
கொத்தமல்லி இலை – 1/2 கப்
மிளகாய் பொடி -1தேக்கரண்டி
கரம் மசாலா / பிரியாணி மசாலா – 1 தேக்கரண்டி .
எலுமிச்சை சாறு -1 தேக்கரண்டி .
உப்பு தேவையானஅளவு.
நெய் – 5தேக்கரண்டி .
சுடு நீர் – 1/2 கப் .
முழு மசாலா பொருட்கள் :
பட்டை -3
கிராம்பு -8
ஏலம் – 1
மராட்டி மொக்கு – 1
கல் பாசி – 1
நட்சத்திர சோம்பு -1
பிரிஞ்சி இலை – 1
அரிசி வறுப்பதற்கு :
நெய் – 1தேக்கரண்டி
பட்டை – 1
கிராம்பு – 2
பிரிஞ்சி இலை – 1
வெங்காயம் – 1
கொத்தமல்லி இலை – 2 தேக்கரண்டி
புதினா இலை – 2 தேக்கரண்டி
மட்டன் கலக்குவதற்கு :
தயிர் – 1/4 கப்
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
மிளகாய் பொடி – 1 தேக்கரண்டி
கரம் மசாலா / பிரியாணி மசாலா – 1 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி
உப்பு தேவையானளவு.
செய்முறை :
) ஆட்டுக்கறியை நன்றாக கழுவி , சுத்தம் செய்து , மேலே கொடுக்கப்பட்டுள்ள மசாலா பொருட்களை சேர்த்து கலக்கி , ஒரு மணிநேரம் ஊறவைக்கவும்.
) வெங்காயம் , தக்காளியை நீளவாக்கில் நறுக்கி வைத்து கொள்ளவும் .
) அரிசியை கழிவு , அரை மணிநேரம் ஊறவைக்கவும்.
) குக்கர்இல் 3 தேக்கரண்டி நெய் சேர்த்து ,அத்துடன் முழு மசாலா பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
) பின்னர் அத்துடன் வெங்காயம் , இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.

) அத்துடன் மல்லி ,புதினா , தக்காளி சேர்த்து , தக்காளி வதங்கும்வரை வதக்கவும்.

) மிளகாய் பொடி , பிரியாணி மசாலா சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
) அத்துடன் மட்டன்ஐ சேர்த்து , சிறிதளவு சுடு தண்ணீர் ,உப்பு சேர்த்து , 5 விசில் விடவும்.

) விசில் அடங்கியவுடன் ,மட்டனில் இருந்து தண்ணீரை தனியாக பிரித்து வைக்கவும்.

) வாணலியில் 1 தேக்கரண்டி நெய் சேர்த்து(அரிசி வதக்கும் பொருட்கள் )- பிரிஞ்சி இலை , பட்டை , கிராம்பு ,புதினா , மல்லி ,வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
) அத்துடன் ஊறவைத்த அரிசி சேர்த்து , அரிசி நெய்யுடன் நன்றாக கலங்கும்படி வதக்கி , வறுத்த அரிசியை ,குக்கர்இல் மட்டன்உடன் சேர்த்து கலக்கவும்.

அஅ) அத்துடன் மட்டன் வேகவைத்த தண்ணீர் 4 கப் அளந்து ஊற்றி ( போதவில்லையென்றால் சுடு தண்ணீர் சேர்த்து ஊற்றவும் ) 2 விசில் விடவும் .
அஆ) விசில் அடங்கியவுடன் , மீதமிருக்கும் நெய் , எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கி , ஒரு 15 நிமிடம் அமுக்கி வைத்து பரிமாறலாம்.

அஇ) நான் மட்டன் கட்லெட் மசாலா , தயிர் பச்சடியுடன் பரிமாறினேன் , நீங்கள் உங்கள் விருப்பம்போல் பரிமாறலாம் .    
                

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...